Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM
சென்னை, அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் வாயிலாக தபால் சேவைகள், அதாவது, மணியார்டர், பதிவுத் தபால், சேமிப்பு வங்கி முதலிய சேவைகளை பெற்றுவரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றைத் தெரிவிக்கலம்.
குறைகளை நேரிலோ, தபால் அல்லது மின்னஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) மூலமாகவோ வரும் 16-ம் தேதிக்குள் தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு ‘குறைதீர்வு முகாம்’ என குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், 19-ம் தேதி அன்று காலை 10 மணியளவில் பயனாளிகள் குறை தீர் கூட்டத்தில் நேரிலும் கலந்து கொள்ளலாம் என்று அண்ணா சாலை தலைமை அஞ்சலக அதிகாரி சு.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT