

நெய்வேலியில் 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெய்வேலி மெயின் பஜாரில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டிருந்த ரங்கோலி கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி நேற்று பார்வையிட்டார்.
பொதுமக்களுக்கு வாக் களிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இளம் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கி வாக்களிக்க வருமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து வாக்களிக்கும் முறை குறித்து இளம் வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். `வாக்களிப் பது எனது கடமை’ என உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, கேபிள் டிவி வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.