

கரூர் மாவட்டம் தாளப்பட்டி கூலநாயக்கனூர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவரது மனைவி தேவி(39). சுப்பிரமணி கடந்த 10-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின்னர், தன்மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டுக் கொண்டார். இதையடுத்து கரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.