நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் - 22 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடக்கம் :

பாளையங்கோட்டை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாளையங்கோட்டை தாலுகா அலுவலக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  படம்: மு.லெட்சுமி அருண்.
பாளையங்கோட்டை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாளையங்கோட்டை தாலுகா அலுவலக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 12) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 6, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தலா 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வரும் 19-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

திருநெல்வேலி

தென்காசி

தூத்துக்குடி

கன்னியாகுமரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in