யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாளையங்கோட்டையில் அழகுமுத்துக்கோன் சிலைமுன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: மு.லெட்சுமி அருண்.
Regional01
யாதவ சமுதாயத்தினர் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் :
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாளையங்கோட்டையில் அழகு முத்துக்கோன் சிலைமுன் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், யாதவர் சமுதாயத்தை அதிமுக தலைமை புறக்கணிப்பதாக கூறி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக 1-வது வட்ட பிரதிநிதி பாலு, வட்ட செயலாளர்கள் சரண்சீனிவாசன், அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலி தொகுதியை யாதவர் சமுதாயத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
