

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வழிப்புணர்வு குறும்படங்களின் குறுந்தகட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ‘எந்தவொரு வாக் காளரும் விடுபடக்கூடாது’ என்ற கருத்தின் அடிப்படையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வாக்களிப்பதன் முக்கியத்து வம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் விழிப் புணர்வு குறும்படங்கள் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று வெளியிட்டார். 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம் பகவத், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன், ஆட்சியர் அலுவலக மேலாளர் விஜயகுமார், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.