விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் - வாக்காளர் சேவை மையம் தொடக்கம் :

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையத்தை  மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத் தில் நேற்று வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை வாக் காளர் சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், திட்ட இயக்குநர் காஞ்சனா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியது:

வாக்காளர் சேவை மையத்தில், வாக்காளர்கள் பெயர் அறியும் வசதி, வாக்களர் பதிவு, அடையாள அட்டை வழங்குதல், வாக்குச்சாவடியை அறிய உதவும் வசதிஉள்ளிட்டவை குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். வாக்காளர் அட்டை சிதைந்திருந்தால் ரூ. 25 செலுத்தி புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வாக்காளர் சேவை மையத்தை 1950 என்றதொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தேவையானவிவரங்களை பெற்றுக்கொள் ளலாம். தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 20-ம்தேதி ஏற்கெனவே வெளியிட்டு விட்டது. இதில் பெயர் இல்லாதவர்கள், முகவரி, தொகுதி மாற விரும்புவர்கள், திருத்தம் செய்ய விரும்புவர்கள் தேர்தலுக்கு முன் அவற்றுக்காக விண்ணப்பித்தால் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

இதே போல் இனி புதிதாக விண்ணப்பிப்பவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களும் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய பின்பு வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பிபவர்கள் இத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in