மாணவியிடம் நகை மோசடி செய்தவர் கைது :

மாணவியிடம் நகை மோசடி செய்தவர் கைது :
Updated on
1 min read

கல்லிடைக்குறிச்சி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கீழஏர்மாள் புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் தென்காசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவருடன் வாட்ஸ்அப் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், சொந்த ஊருக்கு வருவதற்கு மாணவியிடம் சங்கரலிங்கம் பணம் கேட்டுள்ளார்.

இதையடுத்து முகநூல் நண்பரான தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த ரெங்கராஜன் (29) என்பவரிடம் நகையை கொடுத்து, அடகுவைத்து பணம் பெற்றுத்தருமாறு மாணவி கூறியுள்ளார். ஆனால், ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நகைகளை பெற்றுக்கொண்ட ரெங்கராஜன் மோசடி செய்து ஏமாற்றியதாகவும், பணத்தை கேட்டால் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார் என்றும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி ரெங்கராஜனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in