தேர்தல் விதிகளை மீறி கறவை மாடுகளுக்கு கடனா? :

தேர்தல் விதிகளை மீறி கறவை மாடுகளுக்கு கடனா?  :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தொகுதிக் குட்பட்ட நல்லா பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 15 பேருக்கு கறவை மாடு வாங்க கடன்வழங்கப்படுகிறது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் இவ்விதி மீறப்படுகிறது. இதன் பின்னனியில் அதிமுகவினர் உள்ளனர் என்று திமுகவினர் குற்றம்சாட்டினர்.

இது குறித்து கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, “பயிர்க்கடன் , ஆடு வளர்க்ககடன், கறவை மாடு வாங்க கடன்என பல்வேறு கடன்களுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படுகின்றன. தற்போது எவ்விதகடன்களும் வழங்கப்படுவ தில்லை. பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழும் கடந்த 24-ம்தேதிவரை மட்டுமே வழங்கப்பட்டது. அனைத்து கடன்களும் தேர்தலுக்குப் பிறகே வழங்கப்படும். இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in