

தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியில் புறவழிச் சாலை உயரமாக அமைக் கப்பட்டு வருவதால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல சிரமமாக இருப்பதாகக் கூறி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சாலை அமைக்கும் வாகனங் களை அப்பகுதி மக்கள் சிறைப் பிடித்தனர்.
அவர்களிடம் நெடுஞ்சாலைத் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பணி முடிந்ததும் இணைப்புச் சாலை அல்லது சப்-வே அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.