நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கான - வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு :

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி  ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங் கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 120 சதவீதம், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 120 சதவீதம், விவிபாட் இயந்திரங்கள் 133 சதவீதம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மேற்கொண்ட செலவினங்களை கணக்கிடுவதற்காக அமைக்கப் பட்ட செலவினங்கள் கணக்கீடு ஆய்வு குழுவினர், செலவினங்கள் குறித்த விவரங்களை முறையாக பராமரிப்பது குறித்து விளக்கினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. பெருமாள், சார் ஆட்சியர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in