அரசு பேருந்தை சேதப்படுத்திய 8 இளைஞர்கள் கைது  :

அரசு பேருந்தை சேதப்படுத்திய 8 இளைஞர்கள் கைது :

Published on

சென்னையில் இருந்து தி.மலை மாவட்டம் செய்யாறுக்கு கடந்த 7-ம் தேதி இரவு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. செய்யாறு–காஞ்சிபுரம் சாலையில் கிளியாத்தூர் பகுதியில் வந்தபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், அரசுப் பேருந்து வழிமறித்து,கற்களை வீசி தாக்கி கண்ணாடியை நொறுக்கினர். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து செய்யாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி வந்தனர். விசாரணையில், புளியரம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் பாரத்(27), தேவேந்திரன்(30), செய்யாறு கன்னியம் நகரைச் சேர்ந்த பிரசாந்த்(26), ரகு(29), மணி(28), அருள் ராஜ்(36) மற்றும் ஆற்காடு சாலையைச் சேர்ந்த தியாகராஜன்(28) உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in