விழுப்புரம், புவனகிரியில் பறக்கும் படையினரால் ரூ.3 லட்சம் பறிமுதல் :

விழுப்புரம், புவனகிரியில் பறக்கும் படையினரால் ரூ.3 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

புவனகிரி அருகே உள்ள கீரப்பாளை யத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனயில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி, சோதனை செய்ததில் காரில் சென்ற சீர்காழி அருகே உள்ள மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வறுகடலை வியாபாரி பாலச்சந்தர் என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.69,200 வைத்திருந்தார்.

இதேபோல் நேற்று புவனகிரியில் இருந்து நாமக்கல் செல்லும் முட்டை வண்டியில் எவ்வித ஆவணமும் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.87 ஆயிரத்தை ஆதிவராகநத்தம் பகுதியில் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்

அவ்வழியே வந்த மினி லாரியில் சென்ற பீகார் மாநிலம் கைமூர் பகுதி யைச் சேர்ந்த அம்ஜத் சல்மானி (37)குஜராத்மாநிலம் லாவச்சாவைச் சேர்ந்த ராஜேஷ் யாதவ் (38) ஆகியோரிடம் ஆவணம் இல்லாமல் இருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in