நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் - ஆட்சியர், காவல் அதிகாரிகள் ஆய்வு :

திருநெல்வேலியில் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட  தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு, காவல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  						             படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு, காவல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலியில் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான வே.விஷ்ணு மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி, நாங்குநேரி தொகுதிகளுக்கு மெயின் வளாகத்திலும், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் தொகுதிகளுக்கு தனித்தனி வளாகங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகள் உள்ளிட்டவற்றை ஆட்சியர், மாநகர காவல்ஆணையர் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு செய்தனர்.

விதிமீறல் இல்லை

மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையில் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் விதிகள் மீறப்படவில்லை.

மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற எண்ணுக்கு இதுவரை372 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன. 13,431 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார்.

மாநகர காவல் ஆணையர் அன்பு கூறும்போது, “தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகையின்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுபோல பாஜக பிரச்சாரத்தின்போதும் விதிமீறல் தொடர்பாக ஒரு வழக்கு பதிவாகியுள்ளது” என்றார்.

கூடுதலாக மத்திய படை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in