தமிழக அரசு அறிவித்த ஆணையின்படி கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று 10-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அறிவித்த ஆணையின்படி கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று 10-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 10-வது நாளாக போராட்டம் :

Published on

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று 10- வது நாளாக போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து 58 நாட்கள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி தமிழக அரசு மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் இந்த ஆண்டிலிருந்து வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது.

தற்போது அரசு கட்டணத்தை வசூலிக்காமல், ஏற்கெனவே வசூலிக்கும் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என கல்லூரியில் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசு அறிவித்த அரசு ஆணையின்படி கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி நேற்று 10- வது நாளாக மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு மாணவ,மாணவிகள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in