

தமிழக சட்டப்பேரவை தேர்த லில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள முதிய வர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத் தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 29 ஆயிரம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 16 ஆயிரம் பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க விருப்பம் உள்ளதா என்பதை அறிவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தபால் வாக்கு அளிக்க விரும்புகிறவர்களிடம் அதற்கான படிவம் 12டி-ஐ கொடுத்து, பூர்த்தி செய்து பெற்றுக் கொள்கின்றனர். தபால் வாக்கு அளிக்க விருப்பமில்லாமல் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க விரும்புபவர்களிடம், அதற்கான விருப்ப படிவத்தில் கையெழுத்து பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் முதியவர்களிடம் கையெழுத்து பெறும் புகைப்படத்தையும் எடுத்துச் செல்கின்றனர். இந்தப் பணி விரைவில் முடிக்கப்பட்டு தபால் வாக்கு அளிக்க விரும்பு கிறவர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.