

சேலத்தில் சுத்திகரிக்காமல் கழிவுநீரை வெளியேற்றிய இரு சாயப்பட்டறைகளை மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் உதவி பொறியாளர்கள் எருமாபாளையம் மற்றும் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இரு சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றியது தெரியவந்தது.
இதையடுத்து, இரு சாயப்பட்டறைகளை மூடி சீல் வைத்தனர். மேலும், மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டன.