மதுபானம் தொடர்பாக புகார் அளிக்கலாம் :

மதுபானம் தொடர்பாக புகார் அளிக்கலாம் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண்குராலா தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறை யில் உள்ளபோது மாவட்டத் தில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்வது, கடத்தல் நடைபெறுவதை தடுத்திடவும், மதுபான கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் மற்றும் மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.

அதன்படி பறக்கும் படை அலுவலர் பி.பாக்கியராஜ்- 9884312331 மற்றும் முதன்மை அதிகாரி ரங்கநாதன்-9790531671 என்பவர்கள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பார் கள். பொதுமக்கள் மதுபானம் தொடர்பாக விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் இவர்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க லாம் எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in