குறிஞ்சிப்பாடி அருகே ராசாபாளையத்தில் வயல் விழா நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி அருகே ராசாபாளையத்தில் வயல் விழா நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி அருகே வயல் விழா :

Published on

குறிஞ்சிப்பாடி அருகே வயல் விழா நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ராசாபாளையம் கிராமத்தில் முன்னோடி விவசாயி செந்தில், புதியரகமான கோ.8 என்ற மணிலாவும், வம்பன் 10 என்ற உளுந்து ரகத்தையும் இந்திய உழவர் உர உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனத்தின் (ஐஎப்எப்சிஓ) இப்கோ உரங்களை பயன்படுத்தி பயிர் செய்திருந் தார்.

செழிப்பாக வளர்ந்திருந்த வயல்களில் நேற்று வயல் விழா நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி உழவர்மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமையில் 22 பேர் கலந்து கொண்டனர். சென்னை இப்கோ நிறுவன உதவி மேலாளர் சுரேஷ், நிறுவன கள அலுவலர் ஹரிஷ் உள்ளிட்டோர் பேசினர்.

குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகளின் சேவையை பாராட்டி இப்கோ நிறுவனத்தினர் சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்தினர்.

நிகழ்ச்சியில் முன்னோடி விவசா யிகள் தேவராஜன், கண்ணன், குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொன்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in