அனைத்து வாக்குச்சாவடிகளிலும் - மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை அமைக்க வேண்டும் : கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை

கடலூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
கடலூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

கடலூர் மாவட்ட தேர்தல் அலுவ லர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். நெய்வேலி,பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 248 மண்டல அலுலர் களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங் களை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்குச் சாவடிகளை தயார்படுத்த தேவையான முன்னேற் பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டது.

இதை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து குழுக்கூட் டம் நடைபெற்றது. மாற்றுத்திற னாளிகள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குசாவடிகளிலும் வரும் 10-ம் தேதிக்குள் சாய்தள பாதை உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விருப்பத்தின் அடிப்படை யில் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யவும் அறிவு றுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பாபு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அனைத்து மண்டல அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in