மது கடத்தலை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் :

மது கடத்தலை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் :

Published on

திருவாரூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தல் மற்றும் மது கடத்தலை தடுக்க, அரசு மதுபான கடைகளில் விற்பனையை கண்காணிக்க, இதுதொடர்பாக வரும் புகார் கள் குறித்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் அந்தஸ் தில் 2 அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதன்படி, டாஸ்மாக் உதவி மேலாளர்கள் இஞ்ஞாசிராஜ் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலும், அமர்ஜோதி பறக்கும் படையிலும் பணி செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மதுபானங்கள் தொடர்பான புகார்களை இஞ்ஞாசி ராஜை 94434 48064, அமர்ஜோதியை 87548 48631 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in