Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி - 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் :

தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரத்தில், கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி 2-வது நாளாக விவசாயிகள் காய்ந்த பயிர்களை கைகளில் ஏந்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப் பட்டி, திருமலைசமுத்திரம், அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15 ஏரிகளுக்கு கட்டளைமேட்டு வாய்க்கால் வழி யாக தண்ணீர் வந்துசேர்கிறது. இந்த ஏரிகள் மூலம் அப்பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் ஒருபோக சம்பா சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கட்டளைமேட்டு வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால், சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் கருகத் தொடங்கி விட்டதாகவும், குறைந்தது 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியும் அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக எந்தவித நடவடிக் கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று முன்தினம் பிடாரி ஏரி யில் இறங்கி விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, 2-வது நாளாக விவசாயிகள் நேற்று திரு மலைசமுத்திரத்தில் காய்ந்த சம்பா பயிர்களை கைகளில் ஏந்தியபடி தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ் சாலையோரத்தில் அமர்ந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். அதிகாரிகள் உறுதியளித்தபடி தண்ணீர் திறக் காததால், தண்ணீர் திறக்கப்படும் வரை இப்போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி ஆகியோர் அங்கு சென்று, போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்த னர்.

பின்னர், பொதுப்பணித் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை ஆட்சி யர் ம.கோவிந்தராவ் நேரில் வரவழைத்து, விவரத்தை கேட்டறிந்தார். பின்னர், கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் வரும் வகையில், ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப் பதாக ஆட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x