ஆன்லைன் சட்ட விழிப்புணர்வு முகாம் :

ஆன்லைன் சட்ட விழிப்புணர்வு முகாம் :
Updated on
1 min read

தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்த 12 மணிநேர ஆன்லைன் சட்ட விழிப்புணர்வு முகாமை நாளை (8-ம் தேதி) நடத்தவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சார்பு நீதிபதியுமான பி.வி.வஷீத்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைன் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களால் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் கைபேசியில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து 7010663380, 6380806525, 9047696978 என்ற ஏதேனும் ஒரு கைபேசி எண்ணை தொடர்புகொண்டு முகாமுக்கான லிங்கை வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in