நெல்லையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி :

திருநெல்வேலி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் 5  பேரவை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 பேரவை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 பேரவை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத் தில் திருநெல்வேலி, பாளையங் கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பணியாற்றும் 157 மண்டல தேர்தல் அலுவலர்கள் தலைமையிலான குழுவினருக்கு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் முன்னிலை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் எம்.கணேஷ்குமார், என்.சாந்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதுவரை 7 வழக்குகள்

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 29 மதுபாட்டில்கள், 64 வேட்டிகள், ரூ.1.25 லட்சம் ரொக்கம், 7.72 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற சேவை எண்ணில் இதுவரை 199 தகவல்கள் பெறப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2,495 சுவர் விளம்பரங்கள், 5,210 சுவரொட்டிகள், 615 பதாகைகள், மற்றவை 829 என்று, மொத்தம் 9,149 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

கொடி அணிவகுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in