தேர்தலில் பணியாற்ற முன்னாள் படை : வீரர்களுக்கு அழைப்பு :

தேர்தலில் பணியாற்ற முன்னாள் படை : வீரர்களுக்கு அழைப்பு  :
Updated on
1 min read

தி.மலை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற முன்னாள் படைவீரர் களுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணா மலை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இப்பணிக்கு செல்ல விருப்பமும், உடல் திடகாத்திரமும் உள்ள முன்னாள் படைவீரர்கள், தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தின் 04175 – 233047 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in