Published : 07 Mar 2021 03:17 AM
Last Updated : 07 Mar 2021 03:17 AM

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு - ரூ.6.5 லட்சம் செலவில் கூட்ட அரங்கம், கழிப்பறை : முன்னாள் மாணவர்கள் கட்டி கொடுத்தனர்

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியின்முன்னாள் மாணவர்கள் ரூ.6.5 லட்சம் மதிப்பிலான கூட்ட அரங்கம் மற்றும் கழிப்பறையை கட்டி கொடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கழிப்பறை மற்றும் கூட்ட அரங்கம் அமைக்க வேண்டும் என மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், கடந்த 1998-2000-ம் கல்வியாண்டில் மேல்நிலை கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 40 பேர் ஒன்றிணைந்து ரூ.6.5 லட்சம் மதிப்பில் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் கூட்ட அரங்கம் மற்றும் கழிப்பறையை கட்டி அதை மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.

இதற்கான நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பிச்சாண்டி வரவேற்றார். தமிழ் ஆசிரியை அருளரசி முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமை வகித்து, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை மற்றும் கூட்ட அரங்கை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், முன்னாள் மாணவர்கள் பிரபாவதி, செல்வி, சவீதா, மனோகரன், கருணாகரன், மதன் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து சொந்தப் பணம் ரூ.6.5 லட்சம் செலவழித்து வடபுதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 36 அறைகள் கொண்ட இருபாலர் பயன்படுத்தக்கூடிய நவீன கழிப்பறைகள் மற்றும் கூட்ட அரங்கை அமைத்து கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி யளிக்கிறது என ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x