தேர்தல் பறக்கும் படையினரால் - திட்டக்குடி அருகே ரூ.2.8 லட்சம் பறிமுதல் :

தேர்தல் பறக்கும் படையினரால்  -  திட்டக்குடி அருகே ரூ.2.8 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

திட்டக்குடி அருகே ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

திட்டக்குடியை அடுத்த மங்களூர் பகுதியில் ஜெயசீலன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பைக்கில் வந்தவரிடம் சோதனை நடத்தியதில் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் எவ்வித ஆவணமுமின்றி கொண்டுவரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் திட்டக்குடியை அடுத்த ம.பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகாந்த் (35) என்பது தெரியவந்தது.

உதவித்தொகை வழங்க பணம் எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் தினேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டிவனம் கல்லூரி சாலை யில் தேர்தல் பறக்குபடை அலுவலர் திருவேங்கடம் தலைமையி லான குழுவினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சியை நோக்கி சென்ற காரை சோதனை மேற் கொண்டனர். உரிய ஆவணமின்றி ரூ 1.34 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. விசாரணையில் காரில் வந்தவர் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (34) என்று தெரியவந்தது. திரைப்பட தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வருவதாகவும், படப்பிடிப்பு செலவுக்காக பணம் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திண்டிவனம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in