உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.74 லட்சம் பறிமுதல் :

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.74 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படையினர் கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தளவா பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாட்டின்கராவைச் சேர்ந்த சாஜு(27) வந்த காரை சோதனையிட்டபோது, அதில், உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.2,92,500 பறிமுதல் செய்யப்பட்டு, அரவக்குறிச்சி சார் கருவூலத்தில் ஒப்படைக் கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பறக்கும் படை குழுவினர் ஜெகதாபி அருகே அய்யம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த புல்லான் விடுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பேராவூரணியைச் சேர்ந்த அப்துல்மஜீத் ஆகிய இருவரும் மினிவேனில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.82,000 பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in