நாறும்பூநாதர் சுவாமி கோயிலில் திருவிழா நடத்த ஆலோசனை :

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பழவூர் நாறும்பூநாதர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் கடந்த 2018 , 2019-ம் ஆண்டுகளில் திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

இவ்வாண்டு பங்குனி திருவிழா மற்றும் அதைச் சார்ந்த அனைத்து வைபவங்களும் நடைபெற வேண்டி பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கடந்த 22-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு பழவூர் திருக்கோயில் தக்கார் சுபாஷிணி வழியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் தற்போது திருவிழா நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். திருவிழா நடத்துவது சம்பந்தமாக பழவூர் திருக் கோயிலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தக்கார் சுபாஷிணி தலைமை வகித்தார். அனைத்து சமுதாய மக்களும், பக்தர்களும், திருவிழா மண்டகப்படிதாரர்களும் கலந்துகொண்டனர். கரோனா மற்றும் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு திருவிழாவை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

திருவிழா வரும் 20-ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in