

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 72-வது ஆண்டு மகாசபைக் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். செயலாளர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். உதவித்தலைவர் நாச்சியப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில், ‘சேலம் மாவட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளதால், அவற்றை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு செவ்வாய்பேட்டை சந்தைப்பேட்டை மைதானத்தில் லாரி நிலையம் அமைக்க வேண்டும். லாரி தொழிலுக்கு உறுதுணையாக சேலத்தில் ஆட்டோ நகர் அமைக்க வேண்டும்.
சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறை வேலை செய்யாதபோது, பணம் செலுத்த வசதியாக தனிப்பாதை ஒதுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.