Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை :

இ-சேவை மையங்களில் ரூ.25 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என கரூர் ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8 மூலம் விண்ணப்பம் செய்த வாக்காளர்கள் தங்களது பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டையை கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களில் ரூ.25 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x