திருவண்ணாமலை மாவட்டத்தில் - 24 அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசம் : 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில்  -  24 அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசம் :  45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 24 அரசு மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தி.மலை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதம் இடைவெளியில் இரண்டு தவணைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக http://selfregistration.sit.co-vin.in என்ற இணையதளம் அல்லது ‘ஆரோக்கிய சேது 2.0’ என்ற செல்போன் செயலி வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஓய்வூதிய பாஸ் புத்தகம், என்.பி.ஆர் ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள்தொகை பதிவேடு), பாஸ்போர்ட் என இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி முன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பதிவு செய்தவர்களின் செல் போன் எண்ணுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தேதி, இடம்,நேரம் ஆகியவை குறுந்தகவலாக அனுப்பப்படும். பதிவு செய்யப்பட் டவர்களில் முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். ஒரு செல்போன் எண் மூலமாக நான்கு பேருக்கு முன்பதிவு செய்ய முடியும். இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை களுக்கு நேரில் சென்று அங்குள்ள சுகாதார பணியாளர்களிடம் முன்பதிவு செய்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தி.மலை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார நிலையங்கள் என 24 மையங்களில் இலவசமாகவும், தேர்வு செய்யப்பட்ட ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை, கிரேஸ் மருத்துவமனை, ராஜ் மருத்துவமனை, சேத்துப்பட்டு புனித தாமஸ் ஆகிய தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ரூ.250 கட்டணம் செலுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in