வேப்பூர் 3 சாலையில் நேற்று சடலத்துடன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
வேப்பூர் 3 சாலையில் நேற்று சடலத்துடன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பெரம்பலூர் அருகே விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் கார் ஓட்டுநரை கைது செய்யக் கோரி மறியல்

Published on

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள இச்சிலிக் குட்டையில் நேற்று முன்தினம் காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில், விபத்தில் காய மடைந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சக்திவேலின் சடலம் நேற்று அவரது உறவினர்களிடம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்டது.

சக்திவேலின் சடலத்தை வேப்பூர் 3 சாலையில் வைத்து நேற்று மதியம் அவரது உறவி னர்களும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை உடனடி யாக கைது செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

3 மணி நேரத்துக்கு மேல் நடை பெற்ற மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் டி.எஸ்.பி ரவீந்திரன் தலைமையில் போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in