நெல்லையில் தீவிர வாகன சோதனை

பாளையங்கோட்டை  அருகே  நடைபெற்ற  வாகன சோதனையை  ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை அருகே நடைபெற்ற வாகன சோதனையை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பறக்கும் படை குழுவினர்மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை வட்டம் ராஜகோபாலபுரம், மேலப்பாளையம், கருங்குளம் பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் பார்வையிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 8373 மற்றும் 1950 ஆகிய எண்கள் மூலம்வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர்) சுகன்யா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர்கள் மோகன், லெட்சுமி உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in