

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்களது தரிசனத்துக்கு தேவையான கட்டணச்சீட்டுகளை கோயிலில் உள்ள கட்டணச்சீட்டு விற்பனை மையங்களில் இருந்து நேரடியாக கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தரிசனத்துக்கு தனி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ரூ.100-க்கான கட்டணச் சீட்டுகளை www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து, பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை நிகழ்வுகள் போன்ற விவரங்களை வரவேற்பு மையத்தை தொலைபேசி எண் 04639-242270-ல் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.