Regional01
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள 11 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு, கடந்த 9.2.2021-ன்படி பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நாளை(மார்ச் 1) ஆட்சியர் அலுவலக வளர்ச்சி பிரிவில் நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப் பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், இந்த நேர்காணல் மறுதேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
