போட்டி தேர்வில் பங்கேற்க மீனவ சமுதாய இளைஞர்களுக்குவழிகாட்டு நெறிமுறைகள் திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் தகவல்

போட்டி தேர்வில் பங்கேற்க   மீனவ சமுதாய இளைஞர்களுக்குவழிகாட்டு நெறிமுறைகள் திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் தகவல்
Updated on
1 min read

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கான பயிற்சியில் கலந்து கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட் டுள்ளன என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள் பயனாளிகளாக இருக்க வேண்டும். பயனாளியின் பெற்றோர் பாதுகாப்பாளர் மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் அவசியம். பயனாளியின் வயது 1.2.2021-ன்படி 21 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் வயது வரம்பு 35, எஸ்டி/எஸ்சி வகுப்பினர்களின் வயது வரம்பு 37 ஆகும். மாற்றுத்திறனாளிகளின் வயது வரம்பு 42 ஆகும்.

பயனாளிகள் அங்கீகரிக்கப் பட்ட பல்கலை கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பயின்று இருக்க வேண்டும். பள்ளி கல்வியில் 12-ம் வகுப்பில் 80 சத வீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பயனாளிகள் படிப்பு முடித்து வேறு பணிகளில் பணிபுரிந்து வந்தாலும், தகுதியிருந்தால் இந்திய குடிமைப் பணியில் சேர்வதற்கான ஆயத்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in