மதுரை ஆவின் பணி நியமனங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

மதுரை ஆவின் பணி நியமனங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

Published on

மதுரையைச் சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை ஆவினில் 62 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இப்பணி நியமனங்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை. லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஆட்களை நியமித்துள்ளனர். எனவே, இந்த நியமனங்களை ரத்து செய்து, முறையாக அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், முறையாக அறிவிப்பு வெளியிட்டு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தியே ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு அவர்கள் பணியிலும் சேர்ந்து விட்டனர். மனுதாரர் அதிகாரிகளை மிரட்டி பணம் பெறும் நோக்கில் ஈடுபட்டதாகப் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in