விராலிமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கின்போது கோபுர கலசத்தில் ஊற்றப்படும் புனிதநீர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கின்போது கோபுர கலசத்தில் ஊற்றப்படும் புனிதநீர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாக விளங்கும் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அனைத்து பகுதிகளிலும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், குடமுழுக்கையொட்டி பிப்.21-ம் தேதி விரிவாக அமைக்கப்பட்ட யாகசாலையில் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, நேற்று 6-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்றதையடுத்து, புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் எச்.எம்.ஜெயராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in