வேலூரில் மாற்றுத்திறனாளிகள்தொடர் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினர். படம்:வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினர். படம்:வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத் தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாம் நாளாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று பேரிடர் கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், தெலங்கானா மற்றும் புதுச்சேரியைப்போல் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் இரண் டாம் கட்ட உள்ளிருப்புப் போராட் டத்தில் கடந்த 23-ம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாம் நாளான நேற்று அரசு தரப்பில் இருந்து தங்களை அழைத்து பேசவில்லை எனக்கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்த தகவலறிந்த தெற்கு காவல் துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட வேண்டாம் என சமாதானம் செய்தனர். இதனையேற்று மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in