கடலூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கடலூர் அருகே உள்ள குமளம்குளம் பகுதியில் மழையால் நெல் பயிர் சேதமடைந் துள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி.
கடலூர் அருகே உள்ள குமளம்குளம் பகுதியில் மழையால் நெல் பயிர் சேதமடைந் துள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி.
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் ஊராட்சி நாணமேடு, குமளங்குளம்,காரைக்காடு ஆகிய பகுதிகளில் மழையினால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ககன்தீப்சிங்பேடி மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி கூறியது:

கடலூர் மாவட்டத்தில் கடந்த 21-ம் தேதி பருவம் தவறி பெய்த மழை எதிர்பார்க்காத அளவு அதிகமாக பெய்தது. தமிழ்நாடு முதல்வரின் உத்தரவிற்கிணங்க, மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டோம். பயிர்சேதங்கள் குறித்து கணக்கெடுக் கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மூலம் அறிக்கை தயார் செய்து உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கை பெற்றதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்படும். பாதிப்படைந்த விவசாயிகள் அச்சப்படதேவையில்லை. பாதிக்கப்பட்ட பயிர் வகைகளுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் பயி்ர் காப்பீடு செய்திருந்தால் காப்பீட்டுத்தொகை உடனடியாக வழங்கப்படும். விவசாயிகள் எப்போதும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in