Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

விழுப்புரத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

வேலை வாய்ப்பு முகாமில்20-க்கும் மேற்பட்ட முன்னணிதனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, பணிக்காலியி டங்களுக்கு இளையோரை தேர்வு செய்கின்றன. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் "www.tnprivatejobs.tn.gov.in" என்ற இணையதள முகவரியில் தங்களது கல்வித்தகுதி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 - 226417 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என வேலை வாய்ப்பு மைய உதவி இயக்குநர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x