விருத்தாசலத்தில் வழிப்பறி செய்த  இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

விருத்தாசலத்தில் வழிப்பறி செய்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

Published on

விருத்தாசலத்தில் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி வசந்தியிடம், கடந்த மாதம் 12-ம் தேதி வடலூர் கருங்குழியைச் சேர்ந்த மூட்டப்பூச்சி (எ) சம்பத்குமார் ( 29), தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயினை பறித்து சென்றனர். விருத்தாசலம் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். சம்பத்குமார் மீது 10 வழக்குகள் உள்ளதால் அவரின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி அபிநவ் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, குண்டர் சட்டத்தில் சம்பத்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் உள்ள சம்பத்குமாரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in