ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்ற அரசு ஊழியர்கள்.  அடுத்த படம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி வாசிக்க, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்ற அரசு ஊழியர்கள். அடுத்த படம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி வாசிக்க, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி அவரது உருவப்படத்துக்கு அதிமுக மற்றும் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டது. காட்பாடி, வேலூர் பகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

காட்பாடி செங்குட்டை பகுதியில் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஜெயலலிதா உருவப்படத் துக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் எதிரேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெய லலிதா உருவப்படத்துக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேலூர் பழைய மாநகராட்சிஅலுவலகம் அருகே அலங்கரிக் கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத் துக்கு பகுதி செயலாளர் குப்புசாமி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, வேலூர் சத்துவாச்சாரி, ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாநகர மாவட்டச்செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினருமான சு.ரவி தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அமமுக சார்பிலும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, கலவை, சோளிங்கர், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், அமமுக மாவட்டச்செயலாளர் பார்த்தீபன் தலைமையில் அக்கட்சியினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் நகரச்செயலாளர் டி.டி.குமார் தலைமையில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், கிழக்கு ஒன்றியச்செயலாளர் திருப்பதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றாம்பள்ளி பகுதிகளிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுக மற்றும் அமமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in