Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

மருத்துவப் பணியிடங்களுக்கு சேலத்தில் நேர்முகத் தேர்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது.

சேலம் மாவட்டத்தில் 107 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. மினி கிளினிக்கில் காலியாக உள்ள தலா 200 மருத்துவர், செவிலியர் பணியிடம் மற்றும் 440 மருத்துவ உதவியாளர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டன. இப்பணியிடங்களுக்கு 375 மருத்துவர்கள், 800 செவிலியர்கள், 1,400 மருத்துவ உதவியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் (சுகாதாரம்) துணை இயக்குநர் சுப்பிரமணி, ஆத்தூர் மாவட்ட மருத்துவ பணிகள் (சுகாதாரம்) துணை இயக்குநர் செல்வகுமார் தலைமையில், காலிபணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு சேலத்தில் நடந்தது.

இதில், முதல்கட்டமாக தலா 200 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், 440 மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நேர்முக தேர்வு நடக்கிறது. தேர்வில் கலந்து கொண்டவர்களின் பணி அனுபவம், சான்ழிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x