Published : 23 Feb 2021 03:16 am

Updated : 23 Feb 2021 03:16 am

 

Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

பெரம்பலூர்: பணி நிரந்தரம் செய்யாத தமிழக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை பெரம்பலூரில் நேற்று நடத்தினர். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணி தலைமை வகித்தார். பணிநிரந்தரம் செய்வதாகவும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல, கரூர் மாவட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேற்று தங்களின் ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் மா.பால்ராஜ் தலைமை வகித்தார். சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் முருகேசன், தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்க திருச்சி மண்டலத் தலைவர் ரங்கன், கரூர் மாவட்டத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x