

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடியில் தடை செய்யப்பட்டுள்ள 4 கிலோ கடல் குதிரைகளுடன் நின்ற ராமநாதபுரம் மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த வேலு மகன் குருசாமியை(41) கோட்டைப்பட்டினம் போலீஸார் பிடித்து, வனத்துறையினரிடம் நேற்று ஒப்படைத்தனர். அவரிடமிருந்து கடல் குதிரைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.