திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள்.
Updated on
1 min read

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம்சார்பில், ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டம் நேற்று தொடங்கியது.

`அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். அங்கன்வாடி பணியாளருக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

ஏற்கெனவே, மூன்றுகட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு காணப்படாததால், தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என, அங்கன்வாடி பணியாளர்கள் அறிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானம்மாள் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கீதா, பெருமாள், முருகன், சரவணபெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், தென்காசி மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவி தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகி வேல்முருகன் தொடக்கவுரையாற்றினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்துரையாற்றினர். இந்த போராட்டங்களில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

நாகர்கோவில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in