

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுகசார்பில், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமை வகித்தார். திருச்சி சிவா எம்.பி., முன்னாள் அமைச்சர் தங்கவேலு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வாசுதேவநல்லூரில் மாவட்ட பொறுப்பாளர் ஆ.துரை, எம்பி தனுஷ் எம்.குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், டி.பி.எம்.மைதீன்கான் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்ளிட்ட திமுகவினர் 2 குதிரைவண்டிகளில் வந்தனர். சேரன்மகாதேவியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
நாகர்கோவில்