தி.கோட்டில் ரூ.12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

தி.கோட்டில் ரூ.12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
Updated on
1 min read

திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் வாரந் தோறும் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் மஞ்சளை, இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் மஞ்சளை சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துச் செல்வது வழக்கம். இதன்படி நேற்று திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

அதில் விரலி மஞ்சள் குவின்டால் ரூ.6222 முதல் ரூ.9399 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.6,153 முதல் ரூ.7,570 வரையும், பனங்காளி மஞ்சள் ரூ.11,009 முதல் ரூ.14,599 வரை என மொத்தம் 350 மூட்டை மஞ்சள் ரூ.12 லட்சம் மதிப்பில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in